டிக்டாக்கில் பிரபலமாகி பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கல்லூரி பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

சமூக வலைத்தளங்களில் எத்தனையோ ஆரோக்யமான விஷயங்கள் இருந்தாலும், தீமைகளும் இல்லாமல் இல்லை. அப்படித்தான் டிக் டாக் குறித்து அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது சமூகத்தில் பண்பாடு சீரழிந்து வருவதை காட்டுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், இது ஒரு பயனுள்ள ஜாலியான செயலிதான் என்று மற்றொரு தரப்பும் கூறிவருகின்றனர்.

தென்காசி அருகே வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு 


Advertisement

image

இந்நிலையில், டிக்டாக் செயலியால் ஒரு இளைஞர் பல பெண்களை மோசடி செய்த சம்பவம் வெளியே வந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதி, கே.பிஅருணாசலபுரத்தை சேர்ந்த இளைஞர் கண்ணன். இவர் டிக்டாக்கில் ‘காதல் மன்னன் கண்ணன்’ என்ற பெயரில் ஐடி ஓபன் செய்து மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளார். இதனால் இவருக்கு பல பெண்களின் தொடர்பு கிடைத்ததாக தெரிகிறது.

கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்: அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு


Advertisement

இதனிடையே கண்ணன் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிடுவதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

image

அதாவது, 40-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டது தெரியவந்தது. மேலும் பெண்களை மிரட்டி சுமார் 4 லட்சம் வரை பணம் பெற்றதும் ஒரே பெண்ணை மிரட்டி 2 லட்சத்துக்கும் மேல் பணம் பறித்ததும் தெரியவந்தது. கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement