JUST IN
  • BREAKING-NEWS ‌குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்
  • BREAKING-NEWS ‌வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌சிஏஏவிற்கு எதிராக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாகப் போராட்டம்

பிரதமருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கருத்து - மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த மாநிலங்களவை அதிகாரி பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உருஜல் ஹாசன் பாதுகாப்பு பிரிவு துணை இயக்குநர் பொறுப்பிலிருந்து பாதுகாப்பு அதிகாரி ஆக 5 ஆண்டுகளுக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை பாதுகாப்பு பிரிவு துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் உருஜல் ஹாசன். இவர் பிரதமர் நரேந்திர மோடி, சில மத்திய அமைச்சர்கள் மற்றும் சில மாநிலங்களின் முதலமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருடைய பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    image


‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல் 


இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட அதிகாரி நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார். அதேபோல், அரசியல் நடுநிலைத் தன்மையைக் காக்கத் தவறிவிட்டார். தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நிறையப் பதிவுகளைப் பதிவிட்டு வந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    image


‘அரசியல் சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ : முன்னாள் சபாநாயகர் அதிருப்தி 


பதவியிறக்கத்தையும் தாண்டி 5 ஆண்டுகளுக்குச் சம்பள உயர்வு கிடையாது. அப்படியில்லையென்றால், இதேபதவியில் தண்டனை காலம் முடியும் வரைத் தொடர்வார். அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை பிப்ரவரி 10 ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது. பிரதமர் குறித்து கருத்து தெரிவித்த காரணத்திற்காக ஒரு நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவு அதிகாரி பதவியிறக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Advertisement: