“இப்படி சண்டை போடலமா?": மோசமாக முடிந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டம்..!

India-and-Bangladesh-players-involved-in-ugly-fight-after-U19-World-Cup-final

இந்தியா - வங்கதேசம் இடையிலான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசம் அணி வெற்றிப் பெற்றது. முதல்முறையாக ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டியொன்றில் வங்கதேசம் கோப்பை வாங்குவது இதுவே முதல் முறை என்பதால் வங்கதேச வீரர்கள் உற்சாகமடைந்தனர். இந்த உற்சாகம் அளவுக்கு மீறி சென்று ஆக்ரோஷமாக மாறியது.


Advertisement

image

ஜூனியர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வீரர்களிடையே உரசல்போக்கு நிலவியது. இந்தியா பேட்டிங் செய்தபோது வங்கதேச பந்து வீச்சாளர்கள் தேவையில்லாத ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அதேபோல வங்கதேசம் பேட்டிங் செய்யும்போதும் இந்திய பந்துவீச்சாளர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியே ஒரு பக்கம் ஆட்டம் போய்க்கொண்டிருந்தாலும், இறுதியில் வங்கதேசம் போராடி வெற்றிப் பெற்றது. வங்கதேச அணி வெற்றிப் பெற்றதும் அவ்வணி வீரர்கள் மைதானத்தில் தாறுமாறாக ஓடினர்.


Advertisement

image

ஆக்ரோஷமாக மைதானத்தில் வலம் வந்தார்கள். அப்போது தோல்வியடைந்த ஏமாற்றத்தில் இந்திய வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது இந்திய - வங்கதேச வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது கைகலப்பு ஏற்படக் கூடிய சூழல் நேர்ந்தது. இந்தப் பிரச்னை எந்த அணியால் நேர்ந்தது என்று தெரியவில்லை. கள நடுவர்கள் மற்றும் சில அதிகாரிகள் வீரர்களை தடுத்தனர். இதனை பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரே, இந்திய அணி வீரர்களை உடனடியாக பெவிலியன் திரும்புமாறு கூறினார். இதனையடுத்து இந்திய வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.

வங்கதேச கிரிக்கெட்டின் சீனியர் அணியும், பாம்பு நடனம் உள்ளிட்டவற்றை செய்து எதிரணி வீரர்களை வெறுப்பேற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அணியுடன் இத்தகைய பிரச்னை வங்கதேச சீனியர் அணிக்கு ஏற்பட்டது. இப்போதும் வங்கதேச ஜூனியர் அணியும் இதுபோல செயல்களில் ஈடுபட்டது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையே நடைபெற்ற இறுதி ஆட்டம் இப்படி ஒரு மோசமான சம்பவத்துடன் முடிந்திருப்பது பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement