[X] Close >

போஸ்டரை சுட்டுட்டாங்க பாஸு: இது வலை கலாய்!

Social-Media-trolled-First-look-of-Sivakarthikeyans-Velaikkaran

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா உட்பட் பலர் நடிக்கும் படம், ’வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். மலேசியா மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. 24 ஏ எம் ஸ்டூடியோஸ் சார்பில், ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.


Advertisement

சிவகார்த்திகேயன் ஒரு கையில் லேப்டாப் பேக்கையும் மறு கையில் அரிவாளையும் வைத்திருப்பது போல போஸ்டர் வெளியிடப்பட்டது. இது, ‘ஃபாலிங் டவுண்’ என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காப்பி என என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆதாரமாக அந்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஜோயல் ஷூமேக்கர் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மைக்கேல் டக்ளஸ் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் ஒரு கையில் ஷூட்கேஸ், மறுகையில் துப்பாக்கி வைத்திருப்பது போல அந்த போஸ்டர் உள்ளது.

இதே போல ’Joe Somebody’ என்ற படத்தின் போஸ்டரில் ஹீரோ டிம் அலன் ஒரு கையில் ஷூட்கேஸும் மறுகையில் பாக்சிங் கையுறையும் அணிந்திருப்பார். அதையும் ஒப்பிட்டு ’வேலைக்காரனை’ கலாய்த்துள்ளனர் ரசிகர்கள்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close