‘தாயை கொன்றுவிட்டு, கூட்டாளியையும் கொன்ற கொடூரன்’ - சினிமாவை மிஞ்சும் க்ரைம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சொத்துக்காக கூட்டாளியை வைத்து தாயை கொன்றுவிட்டு, பின்னர் கூட்டாளியையும் கொன்ற கொடூரனை கேரள போலீசார் கைது செய்தனர்.


Advertisement

கேரள மாநிலம் முக்கம் பகுதியில் வசித்தவர் பிர்ஜூ. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சொத்திற்காக தனது தாய் ஜெயவல்லியை, இஸ்மாயில் என்ற கூட்டாளியிடம் கூறி வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார். இதற்காக இஸ்மாயிலுக்கு ரூ.10 லட்சம் தருவதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் முக்கத்தில் இருந்து தப்பித்த பிர்ஜூ, கூடலூர் அருகேயுள்ள புலியாடி என்னுமிடத்தில் சொந்தமாக வீடு வாங்கி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார். இதற்கிடையே பணம் கொடுக்கல், வாங்கலில் இஸ்மாயிலுக்கும், பிர்ஜூவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

தாயை கொலை செய்தது தொடர்பாக வெளியே கூறிவிடுவேன் என பிர்ஜூவை, இஸ்மாயில் மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிர்ஜூ, கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்மாயிலை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார். பின்னர் கூடலூரில் பதுங்கியிருக்கிறார். இதற்கிடையே ஜெயவல்லி கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த கேரள போலீசார், பிர்ஜூ கூடலூர் அருகே பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்படி, கடந்த 16ஆம் தேதி புலியாடி பகுதிக்கு வந்த கேரள போலீசார் பிர்ஜூவை கைது செய்தனர்.

image

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் கூலிப்படையாக செயல்பட்ட கூட்டாளி இஸ்மாயிலை கொலை செய்த பின்னர், வீட்டில் இருந்து கட்டிலில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி, பின்னர் தனது பைக்கில் வைத்து கொண்டு சென்று ஆற்றில் வீசியதை பிர்ஜூ ஒப்புக்கொண்டிருக்கிறார். பின்னர் அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டிய போலீசார், அவரை கேரளாவிற்கு அழைத்துச்சென்றனர்.


Advertisement

மாணவியிடம் வாட்ஸ் அப்பில் பேசிய கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து..!

loading...

Advertisement

Advertisement

Advertisement