JUST IN
  • BREAKING-NEWS ‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு
  • BREAKING-NEWS ‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
[X] Close

கேபிள் டிவியில் தர்பார்? - நடவடிக்கை எடுக்க லைகா வலியுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மற்றும் திருச்சியில் கேபிள் டிவியில் தர்பார் படத்தை ஒளிபரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வலியுறுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் மதுரையில் உள்ளூர் கேபிள் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியை சேர்ந்த விஜய் என்பவர் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டம் சிந்துபட்டி பகுதியில் சரண்யா என்ற உள்ளூர் கேபிள் சேனலில் தர்பார் படம் ஒளிபரப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Image result for லைகா

இதேபோன்று திருச்சி உள்ளூர் கேபிள் டிவியிலும் தர்பார் படம் ஒளிபரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்‌பாக மதுரை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள லைகா நிறுவனம், உள்ளூர் சேனல்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement:
[X] Close