அரசு பயன்பாட்டிற்கு நிலம் ஒதுக்கியவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க கோருவது, அரசியல் சாசன உரிமை அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து அப்துல் காதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 1978ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்திருந்ததை குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் அரசுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததை தெரிவித்திருந்தார்.
அத்துடன், கடந்த முறை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வில் கூட, இந்த இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இடஒதுக்கீடு வழங்கும்படி அரசை நிர்பந்திக்க முடியாது என்றும், நிலம் வழங்கியவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமையும் அல்ல என தெரிவித்தார். மேலும், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறி மனுவை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டார்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்