கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
அப்போது அமைச்சர்கள் தாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தனர். காலையில் தொடங்கிய ஆய்வுகூட்டம் மாலை வரை நீடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் வேளையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்