“என்கவுன்ட்டர் செய்ததை வரவேற்கிறேன்”- பிரேமலதா விஜயகாந்த்..!

TN-political-leaders-express-their-views-on-Hyderabad-Encounter

ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

கடந்த 27-ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கூறும்போது, “எல்லோருக்கும் நியாமான முடிவு என்றே தோன்றும். இதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது. நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்‌டனை கிடைத்திருந்தால் சரியானது. தவறு செய்ய நினைப்பவர்களுக்கும் பயம் தரும். என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா எனவும் கேள்வி எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், “என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதை நல்ல செயலாக பார்க்கிறேன். இதேபோன்று கடினமான தண்டனையை குற்றவாளிகளுக்கு தரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement