தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், “கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குன்னூரில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மதுராந்தகத்தில் 10 சென்டி மீட்டரும் செம்பரம்பாக்கத்தில் 9 சென்டி மீட்டரும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 11 சதவிகிதம் அதிக மழை கிடைத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை இயல்பை விட 8 சதவிகிதம் குறைவாகவே மழை கிடைத்துள்ளது.
இதையும் படிக்கலாமே: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த நாசா
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?