விபத்தில் மரணமடைந்த ரசிகர் ! நேரில் அஞ்சலி செலுத்திய கார்த்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாகன விபத்தில் மரணமடைந்த தன்னுடைய ரசிகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. 


Advertisement

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நித்யானந்தன் என்பவர் நேற்று முந்தினம் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது உளுந்தூர்பேட்டை அருகே வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர். மேலும் கார்த்தி சினிமா துறையில் நுழைந்த சமயத்தில் இருந்து அவருடன் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நித்யானந்தன் வாகன விபத்தில் உயிரிழந்தார். நேற்று இரவு உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் நித்யானந்தனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கொண்டு வரப்பட்ட அவரின் உடலுக்கு நடிகர் கார்த்தி, இன்று அதிகாலை 5 மணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement