டெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அம்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 4 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

அம்பத்தூரின் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி கவிதா மற்றும் கேத்வின், கேத்ரீன், ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேத்ரீன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரீனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கேத்ரீன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement