ஐஐடியில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று மதியம் 1 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு இதனை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று மதியம் 1 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி