[X] Close >

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்..!

Heavy-Rain-in-chennai

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Advertisement

சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 30 நிமிடங்கள் மழை செய்தது. பின்னர் நள்ளிரவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்‌டாரப் பகுதிகளில் சு‌மார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முத‌ல் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் இருந்த நிலையில் மாலையில் கன மழை பெய்தது. கோவில்பட்டி மட்டுமின்றி கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.


Advertisement

இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், சன்னாநல்லூர், திருவாரூர், கச்சனம், ஆலத்தம்பாடி, மாங்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை, தேத்தாக்குடி, செம்போடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியிலும் மாலை கனமழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் ரா‌யபுரம், கல்லாங்காடு, கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மே‌லாக‌ க‌‌‌னமழை பெய்தது. இத‌னால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி‌ அடைந்தனர்.‌ அதே போல், நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும்‌ தென்காசி பகுதியில் பரவலாக மழை பெய்தது. மழையால் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர். மழை, விவசாயத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.


Advertisement

இன்றும் காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close