'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்? - பொதுமக்கள் ஆவேசம் 

North-Indian-youngsters-attack-Ola-driver-in-Chennai

சென்னையில் மதுபோதையில் 'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை, பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.


Advertisement

நீலாங்கரையைச் சேர்ந்த 'ஓலா' கால்டாக்சி ஓட்டுநர் சிவச்சந்திரன். இவரது டாக்சியில் பயணித்த வடமாநில இளைஞர்கள், ஏசியை கூட்டி வைக்குமாறு கூறி தகராறு செய்ததோடு, தாக்கியதாக கூறப்படுகிறது. ஆர்.கே.சாலையில் கார் சென்றபோது, வாடகைப் பணத்தையும் கொடுக்காமல் ஒரு ஐடி நிறுவனத்திற்குள் நுழைந்து ஒளிந்துள்ளனர். 


Advertisement

தான் தாக்கப்பட்டதாக முறையிட்ட சிவச்சந்திரனுக்கு ஆதரவாக, அப்பகுதி பொதுமக்கள் ஐடி நிறுவன பாதுகாவலர்களிடம் வட மாநிலத்தவர் பற்றி விசாரித்துள்ளனர். அவர்கள் இல்லை என மறுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாதுகாவலர்கள் 2 பேரை அடித்து உதைத்தனர்.

அங்கு வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், சிவச்சந்திரனை தாக்கிய வடமாநிலத்தவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதற்கு மறுத்த பொதுமக்கள் மீது காவல்துறை வாகனத்தின் ஓட்டுநர் ரவிச்சந்திரன், தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதைக் கண்டித்து, பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement