[X] Close >

பாலிவுட்டில் நடிகராகிறாரா தோனி ?

Indian-former-captain-Dhoni-acting-in-Bollywood-movie

கிரிக்கெட், ராணுவத்தை தொடர்ந்து சினிமாத்துறையில் தோனி கால்பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

பாலிவுட் திரைப்படத்தில் தோனி நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் சஞ்சை தத் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இம்ரான் ஹாஷ்மி மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் தோனி இதுவரை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே இரண்டு மாதங்கள் அவர் இந்திய ராணுவத்தில் பயிற்சிப் பணியில் ஈடுபட்டார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடந்த கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடவில்லை. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் கிரிக்கெட் தொடரில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close