“ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் காங்., ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான்”- செல்லூர் ராஜூ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பில்லை.


Advertisement

சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை மறைப்பதற்காகவே, கே.எஸ். அழகிரி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறார். ரேஷன் கடைகளை குறைகூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு பேச வேண்டும்.” என தெரிவித்தார்.

முன்னதாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement