கடைசி 6 இன்னிங்சில் ஷமி எடுத்த ரன்கள் எத்தனை?  -  ‘ஆட்டம்’கண்ட இந்திய அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்டிங்கில் பந்துவீச்சாளர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தெரியவந்துள்ளது. 


Advertisement

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனினும் இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் கவலையளிக்கும் நிலையில் இருப்பது பந்துவீச்சாளர்களின் பேட்டிங்தான். 


Advertisement

ஏனென்றால் டெய்ல் எண்டர்ஸ் (Tail enders) என்று கருதப்படும் கடைசி ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்படுவதில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசியாக விளையாடிய 6 இன்னிங்ஸில் ரன் எதுவுமே எடுக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டியிலும் இவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய நான்கு இன்னிங்ஸில் ரன் எதுவுமே எடுக்கவில்லை. 

ஆகவே இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களின் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அணிக்கு மிகவும் அவசியமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா சிறப்பாக விளையாடி தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். எனினும் மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement