விங் கமாண்டர் அபிநந்தனுக்கு நாளை வீர் சக்ரா விருது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் சேவையை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் அளித்த வீடியோ வெளியாகியது.


Advertisement

பின்னர் அரசு எடுத்த முயற்சியால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் கம்பீரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் நாளை அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. அதே போல இந்திய விமானப்படை வீரரான மிண்டி அகர்வாலுக்கு யுத் சேவா விருது வழங்கப்பட உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement