[X] Close >

“மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமும் இல்லை”- எடியூரப்பா

Karnataka-cm-letter-to-pm-modi

மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமோ, விதியோ இல்லை என பிரதமர் மோடியிடம் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார்.


Advertisement

கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்ற பின், முதன்முறையாக டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணை குறித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் கடிதம் ஒன்றையும் பிரதமர் மோடியிடம் எடியூரப்பா வழங்கினார். அதில், மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமோ, விதியோ இல்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன் மேகதாது அணை கட்டப்படவுள்ள இடம் கர்நாடகா எல்லைக்குள் உள்ளது. கர்நாடகா எல்லைக்குள் அணை கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close