கணவனின் சந்தேகப் புத்தியால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். ஏதும் அறியாத அவரது இரண்டு வயது மகள் விம்மி அழுவது பரிதாபமாக இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகப்பன். 45 வயதான இவர், தன்னை விட 21 வயது குறைவான கவுரி என்ற பெண்ணை மணந்தார். திருமணமான புதிதில் நல்ல பிள்ளை போல் நடந்துகொண்ட முருகப்பன், பிறகு தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். ஏற்கனவே வயது வித்தியாசம் என்பதோடு, பெண்ணின் நிறமும் ஈகோவை கிளறிவிட, சந்தேக புத்தி முருகப்பனை ஆட்டிப்படைத்தது. இதனால், திருமணமான ஆறே மாதத்தில் மனம் வெறுத்துபோய் விவாகரத்து கோரி, நீதிமன்ற கதவை தட்டியிருக்கிறார் கவுரி. பிறகு தான் திருந்திவிட்டதாகக் கூறி, மூன்று மாதங்களுக்கு முன்பு கவுரியை அழைத்துப்போனவர், மீண்டும் தன் கோர முகத்தை காட்ட துடித்துப்போனார் இளம்பெண்.
இதையடுத்து செல்போனில், தன் ஆற்றாமையை வீடியோவாக பதிவு செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எங்க அம்மா எங்கே? என்று கேள்வி கேட்டபடி அவரது குழந்தை அனாதையாக நிற்கிறது.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி