“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவலை சொல்வதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்கத் தமிழ்ச்செல்வன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்கத் தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா தேனியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி - முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் இடையிலான இணக்கமான நட்புறவை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அவர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருக்கும்போது தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை என ஸ்டாலின் தவறான தகவலை கூறுகிறார். காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளின் ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் தான் நீட் தேர்வு கருத்துருவாக்கம் ஆனது. முதல் நீட் தேர்வு நடந்தது மன்மோகன்சிங் ஆட்சியில் தான். அதை எதிர்த்து வேலூர் சிஎம்சி தடை ஆணை பெற்றது வரலாறு” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement