இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, ரவி சாஸ்திரி இருக்கிறார். பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து, அடுத்த மாதம் நடக்கும் வெஸ்ட் தொடருக்காக அவர்களின் பதவிகாலம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது.
இதற்கிடையே, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆக வாய்ப்பிருப் பதாகத் தெரிகிறது.
பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி