[X] Close >

வீட்டுக்கே வருகிறது ரயில்வே டிக்கெட்டுகள்!

pay-on-delivery-tickets-irctc

ரயில் டிக்கெட்டுகள் வீட்டிற்கே வந்து அளிக்கப்படும் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.


Advertisement

ஐஆர்சிடிசி இப்போது ‘பே ஆன் டெலிவரி’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ஆன்லைன் மூலமாகவோ, ஐஆர்சிடிசி ஆப் மூலமாகவோ ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 5000 ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணமாக 90 ரூபாயும், 5000 ரூபாய்க்கு மேல் பதிவு செய்வோருக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும் டிக்கட் டெலிவரிக்கு முன்பு அதனை ரத்து செய்தால் அதற்கான விநியோகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.


Advertisement

இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் சிரமம் முற்றிலுமாக குறையும் என்று ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags : irctc pay on deliveryirctc
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close