தண்ணீர் பிரச்னைக்கு திமுக செய்து முடித்த தொலைநோக்குத் திட்டங்கள் என்ன என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முறைப்படியும், முனைப்புடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிரொலிக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழகமெங்கும் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எந்த ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப்பெறாமல், தனது கட்சியின் சொந்த பஞ்சாயத்து பேசிவிட்டு திரும்பியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
தலைநகர் டெல்லியில் தமிழக உரிமைகளை தாரை வார்த்து கொடுத்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாகவும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல் கூவத்தில் படகு விடுவதாக ஊழல் சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும் ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே.சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன? — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) June 17, 2019
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல், கூவத்தில் படகு விடுவதாக ஊழல், சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும், ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே. சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன? தொலைக்காட்சி வழங்கி தேர்தல் வெற்றி தேடிய நீங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு செய்துமுடித்த தொலைநோக்குத் திட்டங்கள் என்ன?தினம் ஒரு அறிக்கைதான் தீர்வாகுமா?” என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!