தனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசு, வியாசர்பாடி காவல் நிலையக் காவலர் பவுன்ராஜை திட்டமிட்டு வரவழைத்து வெட்டியது தெரியவந்துள்ளது. தனக்கான புல்லட்டை தானே தேடிக்கொண்டிருக்கிறார் ரவுடி வல்லரசு.


Advertisement

சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்த செய்திதான். ஆனால் அதற்குப்பின் தெரியாத செய்தி ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா? தன்னைத் தேடி வந்த காவலர்களை வல்லரசு வெட்டவில்லை. வெட்டுவதற்காகவே அவர்களை வரவழைத்துள்ளார் என்பதே.


Advertisement

தன்னை கைது செய்ய வந்த வியாசர்பாடி காவல் நிலையக் காவலர் பவுன்ராஜை வெட்டியதுதான் வல்லரசு சுட்டுக் கொல்லப்பட்டதற்கான அடிப்படைக் காரணம். அதிலிருந்துதான் எல்லாம் தொடங்கியது. ‌ரகசியத் த‌கவல் அடிப்படையிலேயே வியாசர்பாடியில் பதுங்கியிருந்த வல்லரசு, அவரது கூட்டாளிகள் கதிரவன், கார்த்திக் ஆகியோரை பிடிக்க காவலர்கள் பவுன்ராஜ் மற்றும் ரமேஷ் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன‌ நடந்தது என்பது வேறு.

வியாசர்பாடியில் குற்றங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் இடம்பெற்றுள்ள காவலர் பவுன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்ட ரவுடி கதிரவன், ஒரு குற்றவாளியைப் பிடித்து வைத்திருப்பதா‌கவும் உடனடியாக வந்தால் ஒப்படைப்பதாகவும் கூறி அவரை வரவைழத்துள்ளார். அதை நம்பித்தான் பவுன்ராஜும் ரமேஷும் கதிரவன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பதுங்கியிருந்த வல்லரசு மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவுன்ராஜை வெட்டியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற ரமேஷையும் தாக்கியுள்ளார். தங்களது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வல்லரசுவும் அவரது கூட்டாளிகளும் தப்பிச்சென்றுவிட்டனர். வல்லரசுவின் ஆட்டம் அதோடு நிற்கவில்லை, தன்னைத் தேடி மாதவரம் வந்த காவல்துறையினரையும் தாக்கினார். விளைவு காவல்துறையினரின் துப்பாக்கி வல்லரசுவின் உயிரைக் குடித்தது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement