JUST IN

Advertisement

கண்கலங்கியபடியே தன் ஓய்வை அறிவித்த மலேசிய பேட்மிண்டன் வீரர் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சாங்கு வே சர்வேதச பேட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 


Advertisement

மலேசியாவின் நட்சித்திர வீரர் என்ற அழைக்கப்படுபவர் லீ சாங்கு வே. இவர் கடந்த 19ஆண்டுகளாக பேட்மிண்டன் உலகில் சிறந்து விளங்கியவர். இவர் 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் பேட்மிண்டன் வீரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் மூக்கு புற்று நோயால் அவதிப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். 


Advertisement

இந்நிலையில் இன்று லீ சாங்கு வே சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னுடைய ஓய்வு முடிவு மிகவும் கடினமானது. ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று. கடந்த 19ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்துவந்த மலேசிய ரசிகர்களுக்கு நன்றி. என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என்று கூறி கண்ணீருடன் விடைப் பெற்றார். 

இவரது ஓய்வு குறித்து இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாய்னா, “உங்களுடைய ஆட்டத்தை நீண்ட நாட்கள் நான் ரசித்தேன். நீங்கள் ஓய்வு பெறுவது மிகவும் வருத்தமளிக்கிறது. உங்களுடைய வருங்கால வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

பேட்மிண்டன் வீரர் பிரனாய், “கடந்த பத்து ஆண்டுகளில் தலைச்சிறந்த பேட்மிண்டன் வீரர் நீங்கள் தான். வயது வெறும் எண் என்று நிருபீத்தவர் நீங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், “பேட்மிண்டன் போட்டிகளில் நீங்கள் எப்போதும் கடினமான ஆட்டக்காராக இருந்தீர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

36 வயதான லீ சாங்கு வே 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் கேம்ஸ் பேட்மிண்டன் போட்டியில் தங்கபதக்கம் வென்றார். இதுவரை பேட்மிண்டன் போட்டிகளில் 69 சர்வதேச பட்டங்களை இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement