[X] Close >

நடிகர் சங்க கட்டிட டெண்டர் பெட்டிக்கு சீல்

tender-box-sealed

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப் பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை மார்ச் மாதம் இறுதியில் நடந்தது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் விளம்பரம் நாளிதழ்களில் நேற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றில் இருந்து மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை டெண்டர் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. அந்த டெண்டரைப் போடுவதற்காக சிறப்புப் பெட்டி ஒன்று நடிகர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

நடிகர் சங்கத்தின் அறங்காவலர் குழ உறுப்பினர்கள் நடிகர்கள் கார்த்தி, பூச்சி முருகன் முன்னிலையில், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் எஸ்.திருமாறன் ஆகியோர் டெண்டர் பெட்டியை, இன்று சீல் வைத்தனர். ​​


Advertisement
Related Tags : karthi actors unionactors union karthi
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close