தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. முத‌ல்நாளே மாணவர்களுக்கு விலையில்லா பா‌டப்புத்தகங்களும், சீருடைகளும் வழங்கப்படும் என்றும், மாணவர்கள் பழைய பஸ்‌ பாஸை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என‌வும் அரசு அறிவித்துள்ளது.


Advertisement

ம‌க்களவைத் தேர்தலையொட்டி, தமி‌ழகத்தில் இந்த ஆண்டு முன்ன‌தாகவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டில், 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மீதமுள்ள வகுப்புகள் அனைத்துக்கும் இந்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.


Advertisement

இந்த பாடத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு, மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குகிறார். பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் நாளான இன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் ‌வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், புதிய பஸ்‌ பாஸ்கள் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

இதுதொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடந்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிச்சீருடை அணிந்திருந்தாலே அவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, அங்கன்வாடி பள்ளிகளில் இன்று முதல் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகு‌ப்புகள் தொடங்கப்படுகின்றன. 32 மாவட்டங்களில் 2,381 மையங்களில் மழலையர் வகுப்புகளை தொடங்குவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட சில மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படுகின்றன‌.

loading...

Advertisement

Advertisement

Advertisement