மாண்ட்யா தொகுதியில் நடிகை சுமலதா முன்னிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக மாநிலம் மாண்ட்யா தொகுதியில், நடிகை சுமலதா முன்னிலை பெற்றுள்ளார்.


Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி யுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.


Advertisement

கர்நாடக மாநிலம் மாண்ட்யா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளரும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி பின் னடைவு பெற்றுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement