மோடியின் ஆட்சியை அகற்றுவது ஆங்கிலேயர் ஆட்சியை வெளியேற்ற அமைத்த ‘வெள்ளையனே வெளியேறு’ புரட்சியை போன்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டி வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை குறித்து விமர்சித்துள்ளார். இன்று மேற்கு வங்கத்தின் தேப்ரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது அவர், “மோடியின் ஆட்சியை அகற்ற நடத்தும் போராட்டம் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திற்கு சமமானது. மோடி ஆட்சியிலிருந்தால் ஜனநாயக முறைக்கு ஆபத்து உண்டாகும். அத்துடன் தேர்தலும் நடைபெறாது. மேலும் தற்போது அவசர கால நிலைப் போன்ற சூழல் உள்ளது. இதனால் மக்கள் வெளிப்படையாக தாங்கள் நினைப்பதை கூறமுடியவில்லை.
அதேபோல தன்னை டீ கடை வியாபாரி என மோடி கூறியது மிகப்பெரிய பொய். தற்போது தன்னை காவலாளி எனக் கூறுகிறார் மோடி. நாட்டிற்கு பொய் சொல்லும் காவலாளி தேவையில்லை. மோடி ஆட்சிக்கு வந்தப் பின்பு நல்ல நாட்கள் வரும் என வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்தது. அதேபோல சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் ஆகியவர்கள் தாக்கப்படுகின்றனர். நாட்டிற்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் தேவை. இதற்கு மாறாக பாஜக நாதுராம் கோட்சே பற்றி பேசி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!