நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நேற்று நிறைவடைந்தது. இம்முறை வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆனதால் மொத்தம் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது எனப் புகார்கள் எழுந்தன. அத்துடன் ஒரு சில வாக்குச்சாவடிகளில் லேசான கலவரமும் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 71.90%ஆக பதிவாகியுள்ளது. இம்முறையும் சென்னையிலுள்ள மூன்று தொகுதிகளிலும் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு சதவிகிதம்
தென்சென்னை 56.34.%
மத்திய சென்னை 58.69%
ஶ்ரீபெரும்பதூர் 61.64%
வடசென்னை 63.48%
கோவை 64.00%
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலிருந்தே சென்னையில் இந்தநிலையே தொடர்ச்சியாக காணப்படுகிறது. உதாரணமாக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 72.94 ஆக இருந்தது. அன்றைக்கு நடந்த தேர்தலில் குறைவான அளவில் வாக்குகள் பதிவான தொகுதிகள்:
நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு சதவிகிதம்
மத்திய சென்னை 61.04%
தென் சென்னை 62.68%
வட சென்னை 64.92%
இதனையடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகுதிகளில்தான் குறைவாக வாக்குக்களே பதிவாகின. அதாவது இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 73.74 ஆகயிருந்தது. அப்போது பதிவான வாக்குகள்:
நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு %
தென் சென்னை 60.44%
மத்திய சென்னை 61.39%
வட சென்னை 64.01%
சென்னை என்பது அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இதை வைத்து பார்க்கும்போது சென்னையில்தான் அதிக வாக்குப்பதிவு இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேர்தல்களிலும் சென்னையில் வாக்குப்பதிவு என்பது மந்தமாகவே காணப்படுகிறது. தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே எடுபடவில்லை என்பது இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
படிப்பறிவு இல்லாத மக்களை வாக்குச்சாவடிக்கு வரவைப்பதற்காக தேர்தல் ஆணையம் பல விளம்பரங்களை வெளியிடுகிறது. ஆனால் அவர்கள் எந்த விளம்பர உதவிகளையும் எதிர்பார்க்காமல் அவர்களின் கடமையை சரிவர செய்து முடிக்கிறார்கள். உண்மையாக சொல்லப்போனால் படித்த மக்களைதான் விளம்பரங்கள் மூலம் வாக்குச்சாவடிக்கு ஆணையம் வரவழைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கின்றனர் சென்னையை தவிர்த்து வாழும் பிற பகுதி மக்கள்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்