கடந்த ஆண்டில் இந்தியாவில் வெளியான கார்பன் - டை ஆக்ஸைட் எரிவாயுவின் அளவு 5% அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
‘இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி’ என்ற அமைப்பு உலகநாடுகளில் வெளியேறும் கார்பன்- டை ஆக்ஸைட் அளவு குறித்து ஆய்வு நடத்தியது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் வெளியேறிய கார்பன்- டை ஆக்ஸைட் அளவு, 5% அதிகமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் 2299 மில்லியன் டன் அளவு கார்பன்- டை ஆக்ஸைட் வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் சீனா வெளியேறியுள்ள கார்பன்- டை ஆக்ஸைட் அளவைவிட அதிகம். இதற்கு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலக்கரி பயன்பாடே காரணம் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியா 2015 பாரீஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் 2030ஆம் ஆண்டிற்குள் 40% எரிசக்தியை மாசு ஏற்படுத்தாத முறைகள் மூலம் உற்பத்தி செய்ய போவதாக தெரிவித்திருந்தது. அதன்படி சூரிய சக்தி போன்றவற்றில் முதலீடு செய்து வந்தது. ஆனால் கடந்தாண்டு இந்தியா நிலக்கரி அல்லாத முறையில் எரிசக்தி தயாரிப்பதில் 3% குறைந்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்படுத்துவது அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இது 10% உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!