பத்திரிகையாளர்களின் சமூகப் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

Do-Consider-the-social-security-of-journalists--Madurai-High-Court

பத்திரிகையாளர்களின் சமூகப் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்திரிகையாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். செய்தியாளர்கள் பலருக்கு குறைந்த ஊதியமே கிடைப்பதாகவும், அதிக நேரம் பணியாற்ற வேண்டியிருப்பதால், ‌உடல் நலமும் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சமூக பிரச்னைகளை துணிச்சலாக வெளியே கொண்டு வருவதாலும், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர‌ மாநிலத்தில் இருப்பது போல, தமிழகத்திலும், பத்திரிகையாளர்களின் நலன் காக்க, நல வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் சமூக பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், நலவாரியத்தை அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement