வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு பெண் தூதுவரை சவுதி அரேபியா நியமனம் செய்துள்ளது
சவுதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான தூதுவராக சவுதி அரேபியா நியமனம் செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் ரீமா பிண்ட், சவுதி அரேபியாவில் தூதர் பதவியை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார். தற்போது அமெரிக்காவின் தூதுவராக ரீமாவின் சகோதரர் காலித் பின் சல்மான் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது நாட்டின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தை ரீமா நிரப்புவார் எனக் கூறப்படுகிறது.
இளவரசி ரீமா பிண்ட்டின் தந்தையான பண்டார் அல் சுல்தான் 1983 முதல் 2005 வரை அமெரிக்க தூதர் பொறுப்பில் இருந்தவர். அந்தக்காலக்கட்டத்தில் தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழித்தார் ரீமா பிண்ட்.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கலை படிப்புகளுக்கான பட்டம் பெற்ற ரீமா, ரியாத்தில் பொது மற்றும் தனியார் துறையிலும் பணியாற்றியுள்ளார். மேலும் ஹார்வி நிக்கோலஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரீமாவை, அரேபியாவின் பலம்வாய்ந்த 200 பெண்களில் ஒருவராக போர்ப்ஸ் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. ரீமா, மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோகியில் இறப்பு குறித்து மர்மம் நீடித்து வரும் வேளையில் ரீமாவை தூதராக சவுதி அரேபியா நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?