ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும்
மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க,
போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


Advertisement

இந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான்
மாநிலத்திலும், சத்தீஸ்கரிலும் யார் முதலமைச்சர் என்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தானில்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய
தலைவர்களுள் ஒருவராக ராஜஸ்தானில் இவர் திகழ்கிறார். அதேசமயம் சச்சின் பலைட் துணை முதலமைச்சராக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement