ஹெலிகாப்டர் பேர வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி 

Agusta-Westland-Case--Delhi-patiala-court-permit-to-investigate-the--Christian-Michel

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல்லை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 


Advertisement

Related image

இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய AW101 ரக அதிநவீன 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதற்காக, 2010ம் ஆண்டு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் ரூ 3600 கோடியளவில் ஒப்பந்தம் போட்டது. இதில், ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு ஒப்பந்த தொகையில் 10 சதவீதம் லஞ்சம் தரப்பட்டதாக புகார்கள் எழுந்தது. 


Advertisement

Image result for AgustaWestland Case Christian Miche

இதனையெடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மீது ரூ.423 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் (54) துபாயில் வசித்து வந்தார். இவரை விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக துபாய் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் துபாய் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Image result for AgustaWestland Case


Advertisement

இதையடுத்து அவர் இந்தியாவுக்கு நேற்று முந்தினம் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்படி அவர் வந்த விமானம் நேற்று டெல்லி வந்து சேர்ந்தபோது. விமான நிலையத்திலேயே அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கிறிஸ்டியனுடன் இணைந்து சதியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அவரிடம் விசாரணை நடத்தவேண்டியிருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று அவருக்கு ஐந்து நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக பல அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக கிறிஸ்டியன் மிச்செல் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement