JUST IN

Advertisement

ஐதராபாத் வந்த குவைத் விமானத்தில் திடீர் தீ: 145 பயணிகள் தப்பினர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குவைத்தில் இருந்த வந்த விமானம் தரையிறங்கும் போது தீ விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 145 பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.


Advertisement

குவைத்தில் இருந்து ஐதராபாத்துக்கு J9 608 என்ற எண் கொண்ட ஜசீரா விமானம் தினமும் இயக்கப்படுகிறது. இந்த விமானம் குவைத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 1.45 மணிக்கு ஐதராபாத்துக்கு வந்தது. அதில் 145 பேர் இருந்தனர். ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத் தில் தரையிறங்கும்போது அதன் இன்ஜின் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட விமானி உடனடியாக விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். விமான நிலையத்தில் தீயணைப்பு வண்டிகள் தயாராக இருந்தன. 


Advertisement

விமானம் தரை இறங்கியதும் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விமானி இன்ஜினை அணைத்ததும் தீயின் வேகம் குறைந்தது. பின்னர் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கு டெக்னிக்கல் பிரச்னை காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement