இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47 மற்றும் டீசல் ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் சர்வதேச மதிப்பை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலை உயர்வால் இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை கடுமையான விலை உயர்வை அடைந்துள்ளது.
கர்நாடகத் தேர்தலுக்கு முன்னர் 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த அடுத்த நாட்களில் விலை உயர்த்தப்பட்டது. இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.47, மும்பையில் ரூ.84.40, கொல்கத்தாவில் ரூ.79.24 மற்றும் டெல்லியில் ரூ.76.57 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டீசலை பொறுத்தவரையில் சென்னையில் ரூ.71.59 மற்றும் டெல்லியில் ரூ.67.82 ஆக விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரியின் வேறுபாடுகளே, மாநிலம் வாரியாக விலை மாற்றம் இருப்பதற்கு காரணமாகும். பெட்ரோலின் விலை நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் தான் ரூ.84.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே டீசல் விலை அதிகபட்சமாக விற்கப்படுவது ஹைதராபாத்தில் தான். அங்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.73.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டிலேயே குறைந்த பட்ச விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேய்ரில் தான். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.66.01 மற்றும் டீசல் ரூ.63.58 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கூறும் பொருளாதார நிபுணர்கள், இந்தியாவில் பெட்ரோல், டீசல் குறைவதற்கு ஒரே வழி வரி குறைப்பு தான் என்கின்றனர். பெட்ரோலின் விலையை விட கூடுதலாக மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்துவதே விலை உயர்விற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். எனவே பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவர வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?
அரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு