[X] Close >

குஜராத் சிறுமியை வன்கொடுமை செய்த கும்பல் தாயையும் கொலை செய்தது அம்பலம்

Surat-rape-murder-case--Accused-killed-11-year-olds-mother-first-say-Gujarat-Police

குஜராத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிக்கியுள்ள குற்றவாளி முதலில் சிறுமியின் தாயை கொன்றதும் தெரியவந்துள்ளது.


Advertisement

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்தன. குஜராத் போலீசார் சிறுமியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடலமாக மீட்கப்பட்ட 3 தினங்களுக்கு பின் அதே பகுதி அருகே மற்றொரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பெண் சிறுமியின் தாயாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், இருவரின் டிஎன்ஏவையும் வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் தாய் மகள் என தெரியவந்தது.


Advertisement

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் ஒப்பந்தத் தொழிலாளரான ஹர்ஷ் சஹாய் என்பவரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு இவர்தான் மூலக் காரணம். இதுகுறித்து போலீசார் கூறும்போது, “ஹர்ஷ் இரு குழந்தைக்கு தந்தை ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 11 வயது சிறுமியையும், அவரின் தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து வாங்கி அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார். பின்னர் தன்னுடன் சேர்ந்த தங்குமாறு அப்பெண்ணை நிர்பந்தித்த நிலையில் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்க கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமியை பல முறை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்” என தெரிவித்தனர். இந்தக் கொலையில் ஹர்ஷ்க்கு உதவியாக இருந்த மற்ற இரு நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close