பெரியார் இருந்திருந்தால் தடியால் அடித்திருப்பார்: ஆ.ராசா கிண்டல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரியார் இருந்திருந்தால் பா.வளர்மதிக்கு விருது கொடுத்த வரை தடியால் அடித்திருப்பார் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.


Advertisement

மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆ.ராசா, “ பெரியார் ஜாதியை ஒழிக்க நினைத்தார். ஜாதி கடவுளின் அடிப்படையில் வருவதாக கூறியதால் தான் பெரியார் கடவுளை வெறுத்தார். அப்படிப்பட்ட பெரியார் விருதை, ஜெயலலிதாவிற்காக தீச்சட்டி எடுத்த பா.வளர்மதிக்கு கொடுக்கின்றனர். இன்று பெரியார் இருந்திருந்தால் தனது பெயரால் பா.வளர்மதிக்கு விருது கொடுத்த வரை தடியால் அடித்திருப்பார்” என்று விமர்சித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement