டாஸ்மாக் ஊழியர்களிடம் லஞ்சம் பெற்ற பொது மேலாளர் உள்பட 3 பேர் கைது

A-bribe-to-TASMAC-employees--3-people-including-General-Manager-arrested

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்களிடமிருந்து டாஸ்மாக் பொதுமேலாளர் மதிச்செல்வம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் முருகேசன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் லஞ்ச தொகை வசூல் செய்துகொண்டு காரில் வருவதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பொதுமேலாளர் காரை வழிமறித்து சோதனை செய்ததில் காரில் 8 லட்சத்து 36ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் இருந்த பொதுமேலாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் பொது மேலாளர் மதிச்செல்வம் மற்றும் கண்காணிப்பாளர்கள் முருகேசன் மற்றும் மணிவண்ணனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement