புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற டாஸ்மாக் பொதுமேலாளர் உள்ளிட்ட 3 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்களிடமிருந்து டாஸ்மாக் பொதுமேலாளர் மதிச்செல்வம் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் முருகேசன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் லஞ்ச தொகை வசூல் செய்துகொண்டு காரில் வருவதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் டாஸ்மாக் பொதுமேலாளர் காரை வழிமறித்து சோதனை செய்ததில் காரில் 8 லட்சத்து 36ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் இருந்த பொதுமேலாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் பொது மேலாளர் மதிச்செல்வம் மற்றும் கண்காணிப்பாளர்கள் முருகேசன் மற்றும் மணிவண்ணனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?