பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ஆர்மியை உருவாக்கிய நடிகை ஓவியா, அவரின் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சர்ஃபரைஸ் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் புகழை அடைந்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் ஒவியா நடந்துக் கொண்ட விதம் மற்றும் அவரின் குழந்தைத் தனமான செயல்களால், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பாராட்டுக்களை வாங்கி தந்தது. பல பகுதிகளில் இருக்கும் ஓவியாவின் ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூக வலைத்தளங்களில் ’ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் குரூப், ஃபேஸ்புக் பேட்ச் என ஆரம்பித்து அதில் ஓவியா குறித்து பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓவியா வெளியில் செல்லும் இடங்கள், ஷாப்பிங் செல்லும் மால்கள் என எங்கும் சென்றாலும், அவரின் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளார். இதேபோல் சமீபத்தில் அவர், தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது ரசிகரிடன் வீட்டிற்கு சென்ற ஓவியா, அவர்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், அங்குள்ள அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ஓவியாவின் இத்தகைய செயலை அவரின் ரசிகர்கள் ஓவியா ஆர்மி பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்