இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் சச்சின் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் யாரும் எதிர்பார்க்காத கெஸ்ட்டாக கலந்துகொண்டார், காயன் செனநாயகே!
இலங்கையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இந்த காயம், விராத் கோலியின் தீவிர ரசிகர். இவரை, கிரிக்கெட் சேனல்களில் பார்த்திருக்க முடியும். இலங்கை கிரிக்கெட் அணி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் இருப்பார். அப்படித்தான் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இலங்கை அணியுடன் வந்திருந்தார்.
இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடர் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக விராத் கோலி அவரை அழைத்து, ‘இலங்கை-இந்தியாவுக்கான கடைசி டி20 போட்டி வரை இங்கு இருங்கள்’ என்றார். ஆச்சரியப்பட்டுப் போன காயனுக்கு பிறகுதான் விஷயமே தெரிந்திருக்கிறது, தனது திருமண வரவேற்புக்காகவே கோலி அப்படிச் சொன்னார் என்பது. அதன்படி, அவர்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு செல்ஃபி எடுத்து திரும்பி இருக்கிறார் காயன். இந்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுபற்றி காயன் செனநாயகே கூறும்போது, ‘இந்த திருமண வரவேற்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் சந்தித்தேன். விராத் கோலி என்னுடன் டான்ஸ் ஆடினார். கடந்த 2007-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட இலங்கை வந்திருந்தார் கோலி. அப்போதுதான் அவரை முதன் முதலாகப் பார்த்து பேசினேன். அதில் இருந்து அவர் எப்போதெல்லாம் இலங்கை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பேன். எங்கள் நட்பு தொடர்கிறது’ என்றார்.
Loading More post
"ஏன் அழுகுறீங்க" - இங்கிலாந்தை மறைமுகமாக கலாயத்த நாதன் லயான்!
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மத்திய அரசு தகவல்
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி