காய்ச்சலால் உயிரிழப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

dengue-death-rates-reduces-said-minister-vijayabaskar

தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்புகள் இல்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்‌சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

புதுக்கோட்டையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த 680 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், அரசின் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலின் பாதிப்பு இறங்குமுகத்தில் உள்ளது. பொதுமக்களுடைய விழிப்புணர்வு, அரசும், அரசு மருத்துவமனைகளும் எடுத்துவரும் முறையான நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு உயிரிழப்புகள் இல்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது என்று கூறினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement