எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கப் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கரைதிரும்பும்போது, மன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் 5 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தீபாவளியையொட்டி தமிழக மீனவர்கள் 42 பேரை இலங்கை அரசு விடுவிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மீனவர்கள் மீண்டும் கைது செய்திருப்பது மீனவ மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement