நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், எம்.பி ஒருவர் உயிரிழந்து இருப்பதால், அவை இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுமா? அல்லது பட்ஜெட் திட்டமிட்டபடி இன்று தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இத்தகைய சூழ்நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த எம்.பி அகமது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், எம்.பி.அகமது-விற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை அவை ஒத்திவைக்கப்படும் என சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடைய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி