ஆஸி. கிரிக்கெட் அணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பங்களாதேஷ் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு, 300 போலீசாரை கொண்ட சிறப்புப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட 2015-ல் முடிவு செய்திருந்தது. அப்போது பாதுகாப்பை காரணம் காட்டி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பங்களாதேஷ் செல்ல மறுத்துவிட்டது. இப்போது பலத்த பாதுகாப்புக்கு பங்களாதேஷ் உறுதிகொடுத்ததை அடுத்து 2 டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று காலை டாக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த அணிக்கு 300 பேரை கொண்ட சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணியினர் ஓட்டலுக்குச் செல்லும் வரை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 


Advertisement

பங்களாதேஷ்- ஆஸி. அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement