கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற கட்சிகளில் பா.ஜ.க.வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அந்தக் கட்சி நான்கு ஆண்டுகளில் ரூ.705 கோடியே 81 லட்சம் பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து தேர்தல் கமிஷனில் வருடம் தோறும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் இருந்து 2015-2016-ம் நிதி ஆண்டுவரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 5 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.1,070 கோடியே 68 லட்சம். இதில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நன்கொடை மட்டும் ரூ.956 கோடியே 77 லட்சம். இதில் பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.705 கோடியே 81 லட்சம் நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதையடுத்து, காங்கிரஸ் கட்சி ரூ.198 கோடியே 16 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் ரூ.50 கோடியே 73 லட்சமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.1 கோடியே 89 லட்சமும், இந்திய கம்யூனிஸ்ட் 18 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் அதிக நன்கொடை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'